காலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்த தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ்

சென்னை ஆர்.கே.நகர் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் இன்று காலையிலேயே பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டு போட்டார்.
காலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்த தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ்
Published on

சென்னை:

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஆர்வதுடன் வாக்களித்து வருகின்றனர். 

இந்நிலையில் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் இன்று காலையிலேயே பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்றார். அங்கு மக்களோடு மக்களாக வரிசையில் நின்று அவர் தனது வாக்கை பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் வெற்றி வாய்ப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மருது கணேஷ், தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும், அ.தி.மு.க.வுக்கும் மற்றவர்களுக்கும் தகுந்த பாடம் புகட்ட மக்கள் காத்திருக்கிறார்கள் என்றும் கூறினார்.

பணப் பட்டுவாடா குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், ‘6 ஆயிரம் அல்ல 60 ஆயிரம் ரூபாய்  கொடுத்தாலும் மக்கள் ஏமாற தயாராக இல்லை. இந்த தேர்தல் முறையாக நடக்க வேண்டும். நடக்கும் என்று நம்புகிறோம்’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com