

தா.பேட்டை:
தா.பேட்டையில் தே.மு.தி.க. கட்சியின் சார்பில் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் கோபிநாதன், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் கே.எஸ். குமார் சிறப்புரையாற்றினார். அப்போது பெட்ரோலுக்கு தினசரி விலை நிர்ணயம் செய்யும் முறையை மாற்றி நிரந்தர விலை நிர்ணயம் செய்ய வேண்டும், மக்களின் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், நியாயவிலை கடைகளில் சர்க்கரை விலை உயர்வை திரும்ப பெற அரசை கேட்டுக் கொள்வது, தா.பேட்டை ஒன்றியத்தில் உள்ள ஏரி, குளங்கள், வரத்து வாய்க்கால்களை தூர்வார வலியுறுத்துவது, கிராமங்கள் தோறும் சுகாதார பணிகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கேப்டன் மன்ற மாவட்ட துணைச் செயலாளர் பெரியசாமி, மாவட்ட பிரதிநிதிகள் மோகன்ராஜ், ராமகிருஷ்ணன், ஊராட்சி செயலாளர்கள் சிவநேசன், கோவிந்தராஜ், பாண்டிய ராஜன், கிளை செயலாளர் கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடில் ஒன்றிய பொருளாளர் சங்கர் நன்றி கூறினார்.