தீபாவளி பட்டாசு விற்பனை: ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 27-ந்தேதி வரை அவகாசம்

தீபாவளி பண்டிகை பட்டாசு விற்பனை செய்ய விரும்புவோர் இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்ய வருகிற 27-ந்தேதி வரை கால நீடிப்பு செய்யப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தீபாவளி பண்டிகை பட்டாசு விற்பனை செய்திட பண்டிகைக்கு 30 நாட்களுக்கு முன் தற்காலிக உரிமம் வழங்கிட விண்ணப்பங்களை இணையதளம் வழியாக சமர்ப்பிக்க விண்ணப்பங்கள் கடந்த மாதம் 31-ந்தேதி வரை பெறப்பட்டது.

தற்போது பட்டாசு விற்பனை செய்திட விண்ணப்பிக்க கால அவகாசம் முடிந்து விட்ட நிலையில், மாவட்டங்களில் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் இந்த புதிய நடைமுறை தங்களுக்கு மேற்கண்ட கால வரையறைக்குள் தெரிய வரவில்லை என்றும், இணைய தளம் வழி மூலம் விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டும் என்றும் வணிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

எனவே இணைய வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கும் நடைமுறை சரிவர அறிய இயலாத காரணத்தினால் தற்காலிக உரிமத்தை பெற விரும்பும் வணிகர்கள், விற்பனையாளர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களின் நலன் கருதி இணைய தளம் வழியாக விண்ணப்பம் செய்ய வருகிற 27-ந்தேதி வரை கால நீடிப்பு செய்யப்படுகிறது.

இக்கால நீடிப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு வணிகர்கள், விற்பனையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com