தீபாவளி பாதுகாப்பு - பழைய குற்றவாளிகள் 8 பேர் கைது

தீபாவளி பண்டிகையையொட்டி வண்ணாரப்பேட்டையில் பிக்பாக்கெட், செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு வழக்குகளில் தொடர்புடையவர்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது
கைது
Published on

ராயபுரம்:

தீபாவளி பண்டிகையையொட்டி வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோடு, ஜி.ஏ. ரோடு பகுதிகளில் நகை, துணி, பொருட்கள் வாங்க வருவோர் கூட்டம் அலைமோதுகிறது. இதையடுத்து அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் பிக்பாக்கெட், செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க இந்த வழக்குகளில் ஏற்கனவே கைதானவர்களை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய ராயபுரம் போலீஸ் கமி‌ஷனர் சுப்புலட்சுமி உத்தரவிட்டார்.

இதையடுத்து வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த பழைய குற்றவாளிகள் அரிகரன், கருப்பு சூரியன், சூர்ய பிரகாஷ், அந்தோணி, பிரகாஷ், விஜய், ரவிச்சந்திரன், அருண் ஆகியோரை வண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் ரவி கைது செய்தார். கைதான 8 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com