விஷம் குடித்த வாலிபர் சாவு

வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார்.சிகிச்சை பெற்று வந்த அஜீத்குமார் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
விஷம் குடித்த வாலிபர் சாவு
Published on

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே ஒடசல்பட்டி கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பராயன். இவரது மனைவி மகேஸ்வரி. கூலித் தொழிலாளி. இவர்களது மகன் அஜீத்குமார் (வயது24). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்த நிலையில் அஜீத்குமாருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு அவதிக்குள்ளானர். இதற்காக அவர் பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்கவில்லை.

இதனால் மனமுடைந்த காணப்பட்ட அஜீத்குமார் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார்.

உடனே அவரை தாய் மகேஸ்வரி மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அஜீத்குமார் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மகேஸ்வரி கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com