வண்டலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்

காண்டீபன் இரவு வீட்டில் குடும்பத்துடன் சாப்பிட்டு விட்டு தூங்கினார். காயார் போலீசார் வழக்கு பதிவு செய்து காண்டீபன் எப்படி இறந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்
Published on

வண்டலூர்:

வண்டலூரை அடுத்த கீரப்பாக்கம், துலுக்கானத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காண்டீபன் (வயது36). காவலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சூர்யா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

காண்டீபன், இரவு வீட்டில் குடும்பத்துடன் சாப்பிட்டு விட்டு தூங்கினார். அதிகாலை மனைவி பார்த்தபோது காண்டீபன் படுக்கையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காயார் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இரவு படுக்க செல்வதற்கு முன்பு உடல்நிலை பாதிப்புக்காக காண்டீபன் கீரப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்து உள்ளார். இதன் பின்னர் அவர் மர்மமாக இறந்து இருப்பது விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

இதுகுறித்து காயார் போலீசார் வழக்கு பதிவு செய்து காண்டீபன் எப்படி இறந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com