எர்ணாவூரில் வாலிபர் மர்ம மரணம்: போலீசார் விசாரணை

ராஜி தலையில் காயம் அடைந்த நிலையில் சாலையோரம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ராஜி இறந்து கிடந்த இடத்தின் அருகே அவரது மோட்டார் சைக்கிள் சாய்ந்து கிடந்தது.
எர்ணாவூரில் வாலிபர் மர்ம மரணம்: போலீசார் விசாரணை
Published on

திருவொற்றியூர்:

எர்ணாவூர், பாரத் நகரை சேர்ந்தவர் ராஜி (வயது 30). கூலித்தொழிலாளி. நேற்று இரவு அவர் எர்ணாவூர் ராமகிருஷ்ணாநகர் அருகே தலையில் காயம் அடைந்த நிலையில் சாலையோரம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்ததும் எண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் விரைந்து வந்து ராஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ராஜி இறந்து கிடந்த இடத்தின் அருகே அவரது மோட்டார் சைக்கிள் சாய்ந்து கிடந்தது. அவர் மோட்டார் சைக்கிளில் வரும்போது கீழே விழுந்து தலையில் அடிபட்டு இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com