வேலை கிடைக்காததால் வேதனை சேலம் லாட்ஜில் வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள ஏ.செட்டிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வேலை கிடைக்காததால் வேதனை சேலம் லாட்ஜில் வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலை கிடைக்காததால் வேதனை சேலம் லாட்ஜில் வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை
Published on

சேலம்:

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள ஏ.செட்டிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் காரியப்பா. இவரது மகன் முனுசாமி (வயது 29). இவர் சேலம் புதிய பஸ் நிலையம் பகுதயில் உள்ள ஒரு லாட்ஜில் நேற்று அறை எடுத்து தங்கி உள்ளார். காலையில் இவருடைய அறை கதவு வெகு நேரம் ஆகியும் திறக்காததால் லாட்ஜ் ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது முனுசாமி தூக்கில் பிணமாக தொங்கினார்.

இது குறித்து லாட்ஜ் ஊழியர்கள் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

இதில், முனுசாமி பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். நீண்ட நாட்களாக தேடியும் வேலை கிடைக்காததால் தனது பெற்றோரிடம், நான் படித்த படிப்புக்கு இங்கு வேலை கிடைக்கவில்லை. அதனால் வெளிநாடு செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆனால் வெளிநாடு செல்ல பெற்றோர் மறுத்துவிட்டதால், மன வேதனையில் இருந்து முனுசாமி, தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com