கணவருடன் சேர்த்து வைக்க கோரி விஷம் குடித்த இளம்பெண்

திண்டுக்கல்லில் கணவருடன் சேர்த்து வைக்க கோரி விஷம் குடித்த இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
கோமதி தனது கணவருடன் எடுத்துக் கொண்ட படம்
கோமதி தனது கணவருடன் எடுத்துக் கொண்ட படம்
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் சின்னஅய்யன்குளம் பகுதியை சேர்ர்ந்த வடிவேலு மகள் கோமதி (வயது25). இவர் இன்று திண்டுக்கல் அஞ்சலி பைபாஸ் அருகே மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரிடம் விசாரித்த போது தான் விஷம் குடித்ததாக கூறினார்.

ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாலமுருகன் என்பவரை திருமணம் செய்து கொண்டு பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு முத்தனம்பட்டியை சேர்ந்த ஜீவா என்பவரை திருமணம் செய்து ஒரு ஆண் குழந்தை உள்ளதாகவும் அவர் கூறினார்.

தற்போது ஜீவா தன்னுடன் சேர்ந்து வாழ மறுப்பதால் தற்கொலை செய்ய முடிவு செய்ததாகவும், எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்க சென்றும் அவர்கள் தனது மனுவை வாங்க வில்லை என்றும் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com