சிதம்பரத்தில் தடுப்பு கட்டையில் மோதி வாலிபர் பலி

தனது நண்பரை புளியங்குடி கிராமத்தில் விட மோட்டார் சைக்கிளில் சென்றார். சாலையோரம் இருந்த கட்டையில் மோதி வாலிபர் இறந்தார்.
சந்தோஷ்குமார்
சந்தோஷ்குமார்
Published on

கடலூர்:

சிதம்பரம் மீன் மார்க்கெட் வீதியில் வசிப்பவர் ஜனார்த்தனன் என்பவரது மகன் சந்தோஷ்குமார் (வயது 28). இன்று அதிகாலை தனது நண்பரை புளியங்குடி கிராமத்தில் விட மோட்டார் சைக்கிளில் சென்றார். நண்பரை இறக்கி விட்டு வீடு திரும்பினார். அப்போது பனி ப்பொழிவு அதிகமாக இருந்தது. இதனால் குச்சிப்பாளையம் அருகேமோட்டார் சைக்கிளில் வந்தபோது சாலையோரமிருந்த குடிநீர் குழாய் கட்டையில் மோதினார். இதில் மார்புப் பகுதியில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சாலையில் சென்றவர்கள் கொடுத்த தகவலின்படி, சம்பவ இடத்திற்கு விரைந்த சிதம்பரம் தாலுக்கா போலீசார் உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடும் பனிப்பொழிவால் சாலையோரம் இருந்த கட்டையில் மோதி வாலிபர் இறந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com