முத்துப்பேட்டையில் வாலிபர் தற்கொலை

மனவேதனை காரணமாக அய்யப்பன் விஷம் குடித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
முத்துப்பேட்டையில் வாலிபர் தற்கொலை
Published on

திருவாரூர்:

முத்துப்பேட்டையை அடுத்த கோவிலூர் வடகாடு கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது32). கடந்த சில நாட்களாக கடும் மனஉளைச்சலில் இருந்த அவர் கடந்த 30-ந்தேதி விஷம் குடித்தார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அய்யப்பன் இறந்தார். இதுகுறித்து அய்யப்பன் சகோதரி மகேஸ்வரி முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட அய்யப்பனுக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com