சங்கராபுரம் அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

மணிகண்டன் மது குடிக்கும் பழக்கம் உடையவர். மனமுடைந்த மணிகண்டன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சங்கராபுரம் அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
Published on

கள்ளக்குறிச்சி:

சங்கராபுரம் அருகே சுத்தமலையை சேர்ந்த முனுசாமி மகன் மணிகண்டன் (வயது 24) மது குடிக்கும் பழக்கம் உடையவர். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் மது பழக்கத்தை நிறுத்துமாறு அவரது பெற்றோர் கூறியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த மணிகண்டன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த மூங்கில்துறைப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com