காயல்பட்டினத்தில் மரத்தில் தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை

கவாஸ்கரும் கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.கடற்கரை அருகே உள்ள மரத்தில் கவாஸ்கர் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.
காயல்பட்டினத்தில் மரத்தில் தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை
Published on

ஆறுமுகநேரி:

காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் சிங்கித்துறையை சேர்ந்தவர் அந்தோணி (வயது 60). மீன்பிடி தொழிலாளி. இவருக்கு ராணி என்ற மனைவியும், கவாஸ்கர் (31) என்ற மகனும், 3 மகள்களும் உள்ளனர். கவாஸ்கரும் மீன்பிடி தொழில் செய்து வந்தார்.

இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கவாஸ்கர் வீட்டிற்கு வரவில்லை. காலையில் அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடினர். அப்போது கடற்கரை அருகே உள்ள மரத்தில் கவாஸ்கர் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு கவாஸ்கரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஆறுமுகநேரி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com