

கோவை,
மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகையை சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 32). கூலி ெதாழிலாளி.
இவருக்கு 6 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 குழந்ைதகள் உள்ளனர். இந்த நிலையில் சுரேந்தருக்கு குடிப்பழக்கம் உள்ளது. அதனை அவர் கைவிட பல முறை முயற்சி செய்து வந்தார்.
ஆனால் அவரால் குடிப்பழக்கத்தை கைவிட முடியவில்லை. இதனை நினைத்து அவர் கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்து வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டை விட்டு வெளியே சென்று மது குடித்து வீடு திரும்பினார்.
வீட்டிற்கு வந்ததும் அவர் அறைக்கு சென்று துக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து சிறுமுகை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.