கோவையில் தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை

ஈஸ்வரன் குஞ்சுபாளையம் பிரிவில் உள்ள மி்க்சர் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். தற்கொலை செய்த ஈஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவையில் தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை
Published on

பொள்ளாச்சி,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 27). கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பொள்ளாச்சிக்கு வந்த இவர் குஞ்சுபாளையம் பிரிவில் உள்ள மி்க்சர் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

இவர் தனது அக்கா மகளை ஒருதலையாக காதலித்து வந்தார். அவரை திருமணம் செய்வது என முடிவு செய்து இருந்தார். இந்த நிலையில் அந்த பெண்ணை வேறு ஒரு வாலிபருக்கு திருமணம் செய்து வைப்பது என முடிவு செய்தனர். இந்த தகவல் ஈஸ்வரனுக்கு கிடைத்ததும் அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

சம்பவத்தன்று மிக்சர் கம்பெனியில் வேலை செய்து கொண்டு இருந்த ஈஸ்வரன் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட ஈஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com