கைதான லோகேஷ்குமார்.
கைதான லோகேஷ்குமார்.

திண்டிவனத்தில் 60 லிட்டர் சாராயத்துடன் வாலிபர் கைது

திண்டிவனத்தில் 60 லிட்டர் சாராயத்துடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
Published on

விழுப்புரம்:

திண்டிவனம் முருங்கப்பாக்கத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அந்த பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்தப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற இளைஞர் ஒருவரை விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார் . மேலும் அவரிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த லோகேஷ் குமார் (வயது 22) என்பதும் அவர் அந்த பகுதியில் தொடர்ந்து கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 60 லிட்டர் சாராயத்தை கைப்பற்றினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com