ஆவடி அருகே ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி- வாலிபர் கைது

சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயல் பொத்தூர் பகுதியில் வங்கி செயல்பட்டு வருகிறது. ஏ.டி.எம். எந்திரத்தில் மர்ம நபர்கள் அதிகாலையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆவடி அருகே ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி- வாலிபர் கைது
Published on

ஆவடி:

சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயல் பொத்தூர் பகுதியில் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் கீழ் தளத்தில் ஏ.டி.எம். எந்திரம் உள்ளது.

இந்த ஏ.டி.எம். எந்திரத்தில் மர்ம நபர்கள் அதிகாலையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அங்கு வந்த ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் ஏ.டி.எம்.மை உடைத்துக் கொண்டிருந்தார். அவரை கைது செய்தனர்.

அவர் வியாசர்பாடி பகுதியை சேர்ந்த எட்வின் என்பது தெரியவந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com