போக்சோவில் கைதான வாலிபர் சிறையில் அடைப்பு

போலீசார் காளிங்கராயன்பாளையம் பகுதிக்கு சென்று அங்கு நின்று கொண்டு இருந்த ராஜாவை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபிசெட்டி பாளையம் மாவட்ட சிறையில் அடைத்தனர்.
போக்சோவில் கைதான வாலிபர் சிறையில் அடைப்பு
Published on

சித்தோடு:

அந்தியூர் பகுதியை சேர்ந்த 13 வயதுடைய ஒரு சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

அந்த சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது தாய் அந்த சிறுமியிடம் விசாரி த்தார். அப்போது அந்த சிறுமி அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழி லாளியான ராஜா (36). என்பவர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறினார்.

இது குறித்து பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ன ம்மாள் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தார். மேலும் அந்த வாலிபரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் கட்டிட கூலி தொழிலாளி ராஜா பவானி அருகே உள்ள காளிங்கராயன்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீ சார் காளிங்க ராயன்பாளையம் பகுதிக்கு சென்று அங்கு நின்று கொண்டு இருந்த ராஜாவை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

போலீஸ் நிலையத்தில் அவரிடம் நடத்திய விசார ணையில் அவர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை ஒப்பு கொண்டார். மேலும் அவருக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் ராஜாவை பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறை யில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com