

கொண்டலாம்பட்டி:
நடிகர் சரவணனுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் சேலம் அருகே கருப்பூரை அடுத்த வட்டக்காடு மஞ்சயன்காடு பகுதியில் உள்ளது. இங்கிருந்த ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள மின் மோட்டாரை காவலாளிகள் இல்லாத சமயத்தில் மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து நடிகர் சரவணனின் உதவியாளர் நரசோதிபட்டி சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்த காமேஷ் கருப்பூர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மின்மோட்டாரை திருடிய ஓமலூர் அருகே உள்ள தாதையன்காரன்பட்டி பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் மணிவேல் (வயது 20) என்ற வாலிபரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து மின்மோட்டாரை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மணிவேல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.