பொள்ளாச்சியில் டிரைவரிடம் பணம் பறித்த வாலிபர் கைது

நடந்து சென்றவரிடம் வாலிபர் பணம் பறித்தார்செல்போனுடன் தப்பியவரை போலீசார் பிடித்தனர்
பொள்ளாச்சியில் டிரைவரிடம் பணம் பறித்த வாலிபர் கைது
Published on

கோவை :

நாகப்பட்டிணம் அருகே உள்ள மயிலாடுதுறையை சேர்ந்தவர் கலைவாணன் (வயது 58). டிரைவர். சம்பவத்தன்று இவர் பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டில் நடந்து சென்றார். அந்த அந்த வழியாக வந்த வாலிபர் கலைவாணனின் பாக்கெட்டில் இருந்த ரூ.8,300 ரொக்க பணம் மற்றும் செல்போனை பறித்து தப்பிச் சென்றார்.

இது குறித்து அவர் பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தினர். டிரைவரிடம் பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற கூலித் தொழிலாளி விஜய் (21) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.  

X

Maalai Malar
www.maalaimalar.com