பெயிண்டருக்கு அரிவாள் வெட்டு வாலிபர் கைது

எனது மகளிடம் பேசக்கூடாது என்று ராஜசேகர் கூறி கண்டித்தார்.ஆத்திரமடைந்த வாலிபர் அரிவாளில் வெட்டினார்.
பெயிண்டருக்கு அரிவாள் வெட்டு வாலிபர் கைது
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை கீழவாசலை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 46) .

இவர் பெயிண்டிங் வேலை பார்த்து வருகிறார்.

இவரது மகள் கீழவாசல் முள்ளுக்கார தெருவை சேர்ந்த ஆனஸ்ட்ராஜ் (22) என்பவருடன் தொடர்ந்து பேசி வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று பிலோபாநந்தவனம் பகுதியில் நின்று கொண்டிருந்த ஆனஸ்ட்ராஜிடம், எனது மகளிடம் பேசக்கூடாது என்று ராஜசேகர் கூறி கண்டித்தார்.

இதில் ஆனஸ்ட்ராஜ் ஆத்திரமடைந்து ராஜசேகரை அரிவாளால் வெட்டினார்.

இதில் பலத்த காயமடைந்த ராஜசேகரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து ராஜசேகர் கொடுத்த புகாரின் பேரில் கிழக்குப் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனஸ்ட்ராஜை கைது செய்தனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com