மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் டிரான்ஸ்பார்மரில் ஏறிய வாலிபர் மின்சாரம் தாக்கி சாவு

தாமஸ்துரைக்கும், முருகேஸ்வரிக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தாமஸ்துரை டிரான்ஸ்பார்மரில் ஏறி மின் கம்பியை தொட்டுள்ளார்.
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் டிரான்ஸ்பார்மரில் ஏறிய வாலிபர் மின்சாரம் தாக்கி சாவு
Published on

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி பேயன்விளை அருகே காணியாளன் தெரு கிழக்கு பகுதியை சேர்ந்தவர் தாமஸ்துரை (வயது25). கோழி கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் ஆத்தூர் அருகே உள்ள வரண்டியவேல் கிராமத்தை சேர்ந்த முருகேஸ்வரி (22) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஏற்கனவே தாமஸ்துரைக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று நள்ளிர வில் தாமஸ்துரை குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரை முருகேஸ்வரி கண்டித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த தாமஸ்துரை வீட்டின் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மரில் ஏறி உயர் மின் அழுத்த கம்பியை தொட்டுள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த முருகேஸ்வரி அக்கம் பக்கத்தினர் துணையுடன் அவரை மீட்டு காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு தாமஸ்துரையை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com