உவரி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி, மேலும் 3 பேர் படுகாயம்

திசையன்விளை அருகே உள்ள உவரியை அடுத்த மேல உவரியை சேர்ந்தவர் குமார்.திசையன்விளை அருகே ஆனைகுடி விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்த போது முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற உவரியை சேர்ந்த ரீகன் (45), ரெனோ (48) ஆகியோர் மோட்டார் சைக்கிள் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவர்க ள் மீது மோதி உள்ளது.
உவரி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி, மேலும் 3 பேர் படுகாயம்
Published on

திசையன்விளை:

திசையன்விளை அருகே உள்ள உவரியை அடுத்த மேல உவரியை சேர்ந்தவர் குமார் (வயது 34).

திசையன்விளையில் இருந்து உவரிக்கு

உவரி அண்ணாநகரை சேர்ந்தவர் முருகன் (40). இவர்கள் 2 பேரும் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் திசையன்விளையில் இருந்து உவரிக்கு சென்று கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளை முருகன் ஓட்டி சென்றார். திசையன்விளை அருகே ஆனைகுடி விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்த போது முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற உவரியை சேர்ந்த ரீகன் (45), ரெனோ (48) ஆகியோர் மோட்டார் சைக்கிள் வேகத்தை குறைத்து வலதுபுறமாக திரும்பும் போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவர்க ள் மீது மோதி உள்ளது.

இதனால் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் பலத்த காயம் அடைந்த குமார் சம்பவ இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேரும் படுகாயம் அடைந்த னர். அவர்கள் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்டனர். குமாரின் உடல் பிரேத பரிசோ தனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரி யில் அனுமதிக்க ப்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் குறித்து உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார். உயிரிழந்த குமாருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். குமார் சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இதனால் குடும்பத்துடன் அங்கு தங்கியிருந்தார். சமீபத்தில் குமாரின் தந்தைக்கு சிகிச்சைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த அவர், நேற்று விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com