இளம்பெண் சாவு

எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீப்பிடித்தது.சிகிச்சை பலனின்றி ஆனந்தி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
இளம்பெண் சாவு
Published on

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் மொரப்பூரை அடுத்த தாமரைகோழியாம்பட்டி பகுதியைச் சேர்ந்த வெற்றி செல்வன். இவரது மனைவி ஆனந்தி (வயது31).

இவர் சம்பவத்தன்று மாட்டிற்கு கூழ் காய்ச்சுவதற்காக அடுப்பை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் அந்த அவரது உடல் முழுவதும் பற்றி கொண்டதால் அவர் வலியால் அலறினார். உடனே அவரது உறவினர்கள் ஓடிவந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து ஆனந்தியை மீட்டு சிகிச்சைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்தி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து மொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com