குடும்ப தகராறில் தீக்குளித்த இளம்பெண் சாவு

கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.மனமுடைந்து காணப்பட்ட நிவேதா வீட்டில் மண் எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.
குடும்ப தகராறில் தீக்குளித்த இளம்பெண் சாவு
Published on

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரபேட்டை அடுத்துள்ள சென்னூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி நிவேதா (வயது23). இவர்களுக்கு திருமணமாகி 4 அரை வருடம் ஆன நிலையில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று மீண்டும் இருவருக்கும் தகராறு நடந்துள்ளது. இதில் மனமுடைந்து காணப்பட்ட நிவேதா வீட்டில் மண் எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நிவேதா பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து சிங்காரபேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 4 அரை வருடம் ஆன நிலையில் நிவேதா இறந்த சம்பவம் குறித்து ஊத்தங்கரை டி.எஸ்.பி. பார்த்திபன் விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com