

திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் கோட்டை காலனி பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் மாடு மேய்த்து கொண்டிருக்கும்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஊர் பெரியவர் கிருஷ்ணன் (66) கணவருடன் சேர்த்து வைப்பதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக கற்பழித்துள்ளார். பின்னர் பலமுறை அவரை மிரட்டி கற்பழித்தார். இதனால் அந்த இளம்பெண் கர்ப்பம் அடைந்தார். தற்போது அவர் 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். கடந்த 5 நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு வீட்டில் குறை பிரசவத்தால் பெண் குழந்தை இறந்து பிறந்துள்ளது.
இதை தொடர்ந்து அந்த இளம்பெண் தனது வீட்டு அருகே யாருக்கும் தெரியாத வகையில் பள்ளம் தோண்டி குழந்தையை புதைத்துள்ளார். இதனை அறிந்த அந்த பெண்ணின் தந்தை திருவள்ளூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் இளம்பெண்ணை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தார்.
இதுகுறித்து திருவள்ளூர் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணனை கைது செய்து திருவள்ளுர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.