மூங்கில் துறைப்பட்டில் டிராக்டரில் சிக்கி இளம் பெண் பலி

மூங்கில் துறைப்பட்டில் டிராக்டரில் சிக்கி இளம் பெண் பலியானார்.இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மூங்கில் துறைப்பட்டில் டிராக்டரில் சிக்கி இளம் பெண் பலி
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே இளையாங்கன்னி பகுதியை சேர்ந்த அருள் மனைவி ரேவதி(35) இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக ரேவதி மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ரேவதி, அந்த வழியாக கரும்புகளை ஏற்றிக் கொண்டு வந்த டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த மூங்கில்துறைப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரேவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com