இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை

கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. மனவேதனை அடைந்த திவ்யா விஷம் குடித்து மயங்கினார்.
இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை
Published on

பேராவூரணி:

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள நாட்டாணிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன் (35).

கூலித்தொழிலாளி. இவரது மனைவி திவ்யா ( வயது 27).இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது.

6 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.

இதனால் மனவேதனை அடைந்த திவ்யா விஷம் குடித்து மயங்கினார்.

அவரை உறவினர்கள் மீட்டு, பேராவூரணி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி திவ்யா நேற்று உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து திவ்யாவின் தாய் சுமதி, பேராவூரணி போலீசில் புகார் அளித்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com