விஷம் குடித்து இளம் பெண் தற்கொலை

குடும்பதகராறில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.மனவேதனையில் இருந்த ஜனனி பூச்சி மருந்தை குடித்தார்.
விஷம் குடித்து இளம் பெண் தற்கொலை
Published on

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரை அடுத்த அத்திவெட்டி பிச்சினிக்காடு பகுதியை சேர்ந்தவர் தாமரைச்செல்வன். இவரது மனைவி ஜனனி (வயது 29). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

தாமரைச்செல்வன் அடிக்கடி குடித்துவிட்டு வருவதால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனஉளைச்சலில் இருந்த ஜனனி பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி விழுந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜனனி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஜனனியின் சகோதரி ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com