தனது வாக்கை வேறுநபர் செலுத்தியதால் வாலிபர் ஏமாற்றம்

திண்டுக்கல்லில் தனது வாக்கை செலுத்த முடியாத வாலிபர் ஏமாற்றம் அடைந்தார்
செல்லப்பாண்டி
செல்லப்பாண்டி
Published on

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகே 35வது வார்டுக்கு உட்பட்ட குருநகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் செல்லப்பாண்டி (வயது 19). இவர் பேக்கரியில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று நடைபெறுகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அவரது முதல் வாக்கை பதிவு செய்ய ஆர்வத்துடன் திண்டுக்கல்-நத்தம் ரோட்டில் உள்ள எக்விடாஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி பூத் எண் 98 க்கு சென்றார். அப்போது செல்லபாண்டி ஏற்கனவே வாக்களித்து விட்டு சென்றதாக பதிவேட்டில் கையெழுத்திடப்பட்டிருந்தது.

இதை தேர்தல் அலுவலர்கள் கூறியதும் அதிர்ச்சியடைந்த செல்லப்பாண்டி தான் இப்போதுதான் வாக்களிக்க வருவதாகக் கூறி தனது கைவிரலை காண்பித்தார். ஆனால் அவரது வாக்கை வேறு ஒருவர் செலுத்தியதை அறிந்ததும், ஏமாற்றத்துடன் வெளியே சென்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com