கொடைக்கானலில் டாஸ்மாக் பாரில் பாட்டிலால் குத்தி வாலிபர் தற்கொலை முயற்சி

போதை தலைக்கேறிய நிலையில் வாலிபர் திடீரென மதுபாட்டிலை உடைத்து தன்னைத்தானே குத்தி கொண்டார்.போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலைக்கு முயன்ற வாலிபர்.
தற்கொலைக்கு முயன்ற வாலிபர்.
Published on

கொடைக்கானல்:

கொடைக்கானல் கலையரங்கம் அருகே டாஸ்மாக் பார் உள்ளது. இந்த பாரில் தேனியை சேர்நத திப்புசுல்தான் என்பவர் மதுகுடிக்க வந்தார். நேரம் செல்ல செல்ல போதை தலைக்கேறிய நிலையில் அவர் திடீரென மதுபாட்டிலை உடைத்து தன்னைத்தானே குத்தி கொண்டார். இதை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக கொடைக்கானல் போலீசாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் கூக்கால் பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் வேலைபார்த்து வந்தது தெரியவந்தது.

எதற்காக அவர் தற்கொலை செய்ய முயன்றார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com