சின்னமனூரில் காதல் திருமணம் செய்த வாலிபர் மர்மச்சாவு

கணவன்-மனைவி இடையே அடிக்கடி கருத்துவேறுபாடு ஏற்பட்டு வந்த நிலையில் வாலிபர் தனது வீட்டில் இறந்து கிடப்பதாக அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்தது.பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

சின்னமனூர்:

தேனி மாவட்டம் சின்னமனூர் ஆலமரத்தெருவை சேர்ந்த இருளப்பன் மகன் பிரபாகரன்(30). இவர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு மாற்று சமூகத்தை சேர்ந்த மீனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி கருத்துவேறுபாடு ஏற்பட்டு வந்ததால் மீனா கோவித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் பிரபாகரன் தனது வீட்டில் இறந்து கிடப்பதாக அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்தது.

அவர் அருகே பூச்சிமருந்து பாட்டிலும் இருந்துள்ளது. இதுகுறித்து பிரபாகரனின் தாய் போதுமணி சின்னமனூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதால் உரிய விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com