பாவூர்சத்திரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி

சத்யராஜ் கேரளாவில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.சாலைப்புதூர் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சத்யராஜின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
பாவூர்சத்திரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி
Published on

தென்காசி:

பாவூர்சத்திரம் அருகே உள்ள அடைக்கலப் பட்டினத்தை அடுத்த அழகாபுரி கிராமம் மாரி யம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் சத்யராஜ் (வயது 31). இவர் கேரளாவில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை கள் உள்ளனர். இவர் நேற்று தனது மனைவியின் சொந்த ஊரான பாவூர்சத்திரம் அருகே உள்ள பஞ்சாண்டியூர் கிராமத்தில் நடந்த கோவில் திரு விழாவில் பங்கேற்க சென்றார். அதில் கலந்து கொண்டு விட்டு இரவில் தனது மோட்டார் சைக்கிளில் அழகாபுரிக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலையில் சாலைப்புதூர் அருகே சென்று கொண்டிருந்த பொழுது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சத்யராஜின் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சத்யராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாவூர்சத்திரம் போலீசார், சத்தியராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாக னத்தை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com