கருங்குளத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

தோரணம் கட்டும் பணியில் நேற்று இரவு இசக்கிராஜ் ஈடுபட்டிருந்தார். செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருங்குளத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
Published on

செய்துங்கநல்லூர்:

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் யாதவர் தெருவைச் சேர்ந்தவர் இசக்கிராஜ் (வயது 32). இவர் கிருஷ்ணாபுரத்தில் உள்ள கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ராமு என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில் கருங்குளம் மேலகுளத்துக்கரை இசக்கியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது. இதற்காக தோரணம் கட்டும் பணியில் நேற்று இரவு இசக்கிராஜ் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி இசக்கிராஜ் தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com