திண்டுக்கல் அருகே வாலிபர் தற்கொலை

கிணற்றில் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் சடலமாக மிதந்தார். வாலிபர் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகில் உள்ள பாலமரத்துப்பட்டியை சேர்ந்த கருப்பையா மகன் கோபால்(24).

இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். நேற்று மாலை வீட்டைவிட்டு சென்றவர் மாயமானார். இன்று காலை அப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் சடலமாக மிதந்தார்.

இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து ேகாபால் உடலை மீட்டனர். மேலும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com