

நிலக்கோட்டை:
கரூர் மாவட்டம் வடுகபட்டியை சேர்ந்தவர் பெருமாள் மகன் முத்துச்சாமி(36). இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த சூரம்மாள்(33) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தனபால்(9), சுபஸ்ரீ(3) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.
முத்துச்சாமிக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் முத்துச்சாமி கோவித்துக்கொண்டு நிலக்கோட்டை அருகில் உள்ள அப்பாவுபிள்ளைபட்டியில் தனது பெரியம்மா வீட்டிற்கு வந்துவிட்டார்.
தனது கணவரை தேடி வந்தபோது மீண்டும் அவருடன் போதையில் தகராறு செய்தார். தகராறு முற்றவே அங்கிருந்த வேப்பமரத்தில் முத்துச்சாமி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதி வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.