பாவூர்சத்திரம் அருகே கடன் பிரச்சினையில் வாலிபர் தற்கொலை

சமீபத்தில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாவூர்சத்திரம் அருகே கடன் பிரச்சினையில் வாலிபர் தற்கொலை
Published on

தென்காசி:

பாவூர்சத்திரம் அருகே காமராஜர் நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 35). இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. சமீபத்தில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால் முருகன் சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டுள்ளார். அதே நேரத்தில் அவருக்கு கடன் பிரச்சனை இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் அங்கு விரைந்து வந்து முருகன் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com