வீரவநல்லூரில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது.மாரியப்பனும், அவரது மனைவியும் பிரேமாவை சமாதானம் செய்துவிட்டு வேலைக்கு சென்றுவிட்டனர்.
வீரவநல்லூரில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

நெல்லை:

வீரவநல்லூர் அருகே உள்ள தெற்கு அரியநாயகிபுரம் செண்பகவல்லி அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் இளங்கோ. இவரது மனைவி பிரேமா(வயது 26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பவத்தன்று பிரேமா தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு கொட்டாரக்குறிச்சியில் உள்ள தனது சகோதரர் மாரியப்பன் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

அங்கு மாரியப்பனும், அவரது மனைவியும் பிரேமாவை சமாதானம் செய்துவிட்டு வேலைக்கு சென்றுவிட்டனர். வீட்டில் தனியாக இருந்த பிரேமா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த வீரவநல்லூர் போலீசார் அங்கு விரைந்து சென்று பிரேமா உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com