சிவகிரி அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

சிவகிரி அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயமானார்.இவருடைய செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
இசக்கி செல்வி.
இசக்கி செல்வி.
Published on

சிவகிரி:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா வால்பாறை மெயின் ரோடு அங்கலகுறிச்சி புதுக்காலனியை சேர்ந்தவர் முருகன் மகன் ஜெய கணேஷ் (வயது 34).

இவர் தென்காசி மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள தேவிபட்டணம் மணல் மேட்டுத்தெருவைச் சேர்ந்த இசக்கி செல்வி (27) என்பவரை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இசக்கி ராஜா (5) என்ற மகனும், இசைநேத்ரா (4) என்ற மகளும் உள்ளனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இசக்கி செல்வி தனது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தன்னுடைய இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு தேவிபட்டணம் பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். அதன் பின்னர் செல்போனில் இசக்கி செல்வி தனது கணவருடன் பேசி வந்துள்ளார்.

கடந்த 9-ம் தேதி ஜெயகணேஷ் தனது மனைவியுடன் பேச போனில் தொடர்பு கொண்ட போது இசக்கி செல்வி செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனால் ஜெயகணேஷ் தேவிபட்டணத்தில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு வந்து பார்த்த போது அங்கு தனது மனைவி மற்றும் குழந்தைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து ஜெயகணேஷ் சிவகிரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி மாயமான இசக்கி செல்வி மற்றும் இரண்டு குழந்தைகளையும் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com