

உத்தமபாளையம்:
ஆண்டிபட்டி அருகில் உள்ள ெகாண்டமநாயக்கன்பட்டி பகவதியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி தமிழ்செல்வி(21).
இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரச்சினை இருந்து வந்தது.
இதனால் தமிழ்செல்வி கோவித்துக்கொண்டு கோகிலாபுரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார். பின்னர் அங்கிருந்து சம்பவத்தன்று வெளியே சென்றவர் மாயமானார்.
இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.