நாங்குநேரியில் இளம் பெண் மாயம்

நாங்குநேரி அனுஷியா நகரை சேர்ந்தவர் சுடலைக்கண்ணு (வயது 52). மின்வாரிய ஊழியர். இவரது மகள் அனிதா (20). இவர் பி.காம் படித்துள்ளார்கடந்த 6-ந் தேதி மதியம் அனிதா கடைக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றார். ஆனால் அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை
நாங்குநேரியில் இளம் பெண் மாயம்
Published on

களக்காடு:

நாங்குநேரி அனுஷியா நகரை சேர்ந்தவர் சுடலைக்கண்ணு (வயது 52). மின்வாரிய ஊழியர். இவரது மகள் அனிதா (20). இவர் பி.காம் படித்துள்ளார். இவருக்கும், இவரது உறவினருக்கும் திருமணம் நடத்த குடும்பத்தினர் பேசி முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த 6-ந் தேதி மதியம் அனிதா கடைக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றார். ஆனால் அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். எனினும் அனிதா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து இதுபற்றி அவரது தந்தை சுடலைக்கண்னு நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அனிதாவை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com