கோவையில் காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்கள்

காதல் விவகாரம் இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இளம்பெண்ணின் பெற்றோர் கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தனர்.
கோவையில் காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்கள்
Published on

கோவை,

கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள சென்னியாண்டவர் கோவில் வீதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் தெக்கலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இவருக்கு கும்பகோணத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தங்களை பிரித்து விடுவார்களோ என்ற பயத்தில் இளம்பெண் இருந்தார்.

சம்பவத்தன்று அவர் உடல்நிலை சரி இல்லை என கூறி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இளம்பெண் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார். மகள் வீட்டில் இல்லாதது கண்டு அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

அவர்கள் இளம்பெண்ணை அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து இளம்பெண்ணின் பெற்றோர் கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடியை சேர்ந்தவர் 23 வயது பட்டதாரி இளம்பெண். இவர் உடுமலையை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் மாயமானார். அவரை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

இது குறித்து இளம்பெண்ணின் பெற்றோர் கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம்பெண் அவரது காதலனுடன் சென்றது தெரியவந்தது. போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com