போடி அருகே இளம்பெண்கள் மாயம்

போடி அருகே வெவ்வேறு சம்பவங்களில் இளம்பெண்கள் மாயமாகினர்.போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தேனி:

தேனி அருகே உள்ள குன்னூர் ராணா நகரைச் சேர்ந்த ஜெயகாந்தன் மகள் ரஸ்மிதா (வயது 17). இவர் படிப்பு வரவில்லை எனக்கூறி போடியில் உள்ள தனது அக்கா வீட்டில் இருந்து வந்தார்.

சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் மாயமானார். போடி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ராஜதானி அருகே உள்ள ஆசாரிப்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்த பாண்டீஸ்வரன் மனைவி ஜோதி (22). காதல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு 1 வயதில் பெண் குழந்தை உள்ளது.

சம்பவத்தன்று தனது கணவருடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்த ஜோதி அதன் பின் வீட்டை விட்டு கோபமாக வெளியே சென்றவர் மாயமானார். இது குறித்து ராஜதானி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com