குழந்தை பெற்ற 4 மாதத்தில் இளம்பெண் சாவு

4 மாதங்களுக்கு முன்பு இவருக்கு குழந்தை பிறந்தது. அப்போது முதல் அவருக்கு அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார்
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

மேலசொக்கநாதபுரம்:

குமரி மாவட்டம் சுசீந்திரத்தைச் சேர்ந்தவர் பரணி சக்கரவர்த்தி மனைவி தீபாராணி. (வயது 21). இவர்களுக்கு கடந்த வருடம் திருமணம் நடந்தது.

பிரசவத்துக்காக போடியில் உள்ள தனது உறவினர் சுருளிமுத்து வீட்டுக்கு வந்திருந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இவருக்கு குழந்தை பிறந்தது. அப்போது முதல் அவருக்கு அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்பட்டது.

நேற்று மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் போடி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். ஆனால் அவர் ஏற்கனவே இந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார். இது குறித்து அவரது தந்தை ேபாடி டவுன் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்

X

Maalai Malar
www.maalaimalar.com