நெல்லையில் கணவர் தாக்கியதில் காயம் அடைந்த இளம்பெண் பரிதாப சாவு- கொலை வழக்காக மாற்றம்

செங்கோட்டையைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி மாரித்தாய் (வயது 28).இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் 2 பேரும் கூலி வேலை செய்து வந்தனர்.
நெல்லையில் கணவர் தாக்கியதில் காயம் அடைந்த இளம்பெண் பரிதாப சாவு- கொலை வழக்காக மாற்றம்
Published on

நெல்லை

செங்கோட்டையைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி மாரித்தாய் (வயது 28).இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் 2 பேரும் கூலி வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் கணவன்-மனைவி 2 பேருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த ஒரு வருடமாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதனால் மாரித்தாய் நெல்லை தச்சநல்லூரை அடுத்த அழகனேரியில் தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த 24-ந்தேதி தச்சநல்லூருக்கு வந்த செல்வகுமார் தனது மனைவியிடம் குழந்தைகளை தன்னிடம் கொடுத்து விடும்படி கேட்டுள்ளார்.

இதில் அவர்களுக்குள் தகராறு முற்றியதால் மாரித்தாயை செல்வகுமார் அடித்து கீழே தள்ளினார். இதில் படுகாயம் அடைந்த அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாரித்தாய் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து தச்சநல்லூர் போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com