யோகா தின விழிப்புணர்வு பேரணி

முக்கிய வீதிகளின் வழியாக சென்று பேரணி மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. மாணவ- மாணவிகள் பல்வேறு யோகாசனங்களை செய்தனர்.
விழிப்புணர்வு பேரணி நடந்தது.
விழிப்புணர்வு பேரணி நடந்தது.
Published on

சீர்காழி:

சீர்காழியில் சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி, சீர்காழி மனவளக்கலை மன்றம்,சீர்காழி அரிமா சங்கம் சார்பில் சர்வதேச யோகா தின விழா மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமைஆசிரியர் எஸ்.அறிவுடைநம்பி தலைமை வகித்து பேரணியை துவக்கிவைத்தார்.

எல்.ஐ.சி உதவி இணை மேலாளர் வை.ரவீக்அ ஹமது, வளர்ச்சி அதிகாரி அரவிந்தன் முன்னிலை வகித்தனர்.தொடர்ந்து மாணவ, மாணவிகள் பங்கேற்ற யோகா விழிப்பு ணர்வு பேரணி பள்ளியில் தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.

முன்னதாக மாணவ, மாணவிகள் பல்வேறு யோகாசனங்களை செய்தனர்.

இதில் உடற்கல்வி இயக்குனர்முரளிதரன், யோகா உடற்கல்வி ஆசிரியர் முரளி, மார்கண்டன், ராக்கேஷ் பங்கேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com