சங்கரன்கோவில் அருகே மஞ்சள் பை விழிப்புணர்வு பேரணி

மஞ்சள் பை விழிப்புணர்வு பேரணிக்கு அரசு பள்ளி தலைமை ஆசிரியை பராசக்தி தலைமை தாங்கினார்.மாணவர்கள் பிளாஸ்டிக்கின் தீமைகள், மஞ்சள் பை நன்மைகளை தெரிவிக்கும் பதாகைகளுடன் பேரணியாக சென்றனர்.
மாணவர்கள் பதாகைகளுடன்  ஊர்வலமாக சென்ற காட்சி.
மாணவர்கள் பதாகைகளுடன் ஊர்வலமாக சென்ற காட்சி.
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு மஞ்சள் பை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பேரணிக்கு அரசு பள்ளி தலைமை ஆசிரியை பராசக்தி தலைமை தாங்கினார். ஆசிரியர் மாரித் தங்கம் வரவேற்று பேசினார். ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் மைக்கேல் ராஜ் மாணவர் பேரணியை தொடங்கி வைத்தார்.

மீண்டும் மஞ்சள் பை திட்டத்தை பற்றியும் மாணவர்கள் பிளாஸ்டிக்கின் தீமைகள், மஞ்சள் பை நன்மைகளை தெரிவிக்கும் பதாகைகளுடன் பேரணியாக சென்றனர்.

தமிழ் ஆசிரியை அழகு மகேஸ்வரி நன்றி கூறினார். பேரணி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஏஞ்சல் மலர் மெரினா, வீரலட்சுமி, சகாயம், வர்மா, பெர்ஜிலின், ஹெலன் ஆகியோர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com