சங்ககிரி அருகே நூல் மில் சூப்பர்வைசர் அடித்துக் கொலை?

தனபால்(வயது 44). இவர் குமாரபாளையத்தில் உள்ள தனியார் நூல் மில்லில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
தனபால்
தனபால்
Published on

சங்ககிரி:

சேலம் மாவட்டம் சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், மோரூர் கிழக்கு ஊராட்சி தாசநாயக்கன்பாளையம், அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் தனபால்(வயது 44). இவர் குமாரபாளையத்தில் உள்ள தனியார் நூல் மில்லில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சரிதா(38). இவர்களுக்கு ஜெயஸ்ரீ (20) என்ற மகளும், ரித்தீஷ் (18) என்ற மகனும் உள்ளனர்.

கருத்து வேறுபாடு

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் தனபால், அதே பகுதியை சேர்ந்த கோவில் பூசாரி பழனியப்பன் என்பவரிடம், தங்களை சேர்த்து வைக்குமாறு கூறியதாக தெரிகிறது. இதை அறிந்த சரிதாவின் அண்ணன் சரவணன் (44), சரிதாவின் தாய் ராஜம்மாள் (60) ஆகியோர் தனபாலிடம் தகராறு செய்து அவரை தாக்கியதாக தெரிகிறது.

மயக்கம் அடைந்தார்

இதில் அடிபட்ட தனபால் மயக்கம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், தனபால் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தனபாலின் மனைவி சரிதா, மாமியார் ராஜம்மாள், மைத்துனர் சரவணன் ஆகிய 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com