

மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்ட கிளை நூலகத்தில் உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டது.
மூத்த எழுத்தாளர் கமலா கந்தசாமி, கவிஞர் சரஸ்வதி தாயுமானவன், மூத்த வாசகர் யேசுதாஸ் ஆகியோர் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.
நான்கு நிகழ்வாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முதல் அமர்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்க திருவாரூர் மாவட்ட தலைவர் பொன்முடி தலைமையில் எட்டு நூலகர்கள் தாங்கள் சமீபத்தில் படித்த புத்தகங்களை திறனாய்வு செய்தனர்.
இரண்டாவது அமர்வில் தமிழ் ஆசிரியர் நமாமலைவாசன் தலைமையில் டிஜிட்டல் மீடியாக்களால் வாசிப்பு அதிகரித்திருக்கிறதா? குறைந்து இருக்கிறதா ? என்ற வாசிப்பு குறித்த பட்டிமன்றம் நூலக வாசகர்களை கொண்டு நடத்தப்பட்டது.
மூன்றாவது அமர்வாக நூலகர் ஆசைத்தம்பி தலைமையில் கல்வியா ளர்கள் தாங்கள் சமீபத்தில் படித்த நூல்களை திறனாய்வு செய்தனர்.
இறுதி நிகழ்வாக எழுத்தாளர்கள் வாசகர்கள் நூலகர்கள் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சிக்கு மன்னார்குடி நூலகர் அன்பரசு வரவேற்புரை வழங்கினார்.
கூத்தாநல்லூர் நூலகர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். ஜே.சி.ஐ மன்னை தலைவர் நமாமலைவாசன் தலைமை தாங்கினார். தமிழ் பல்கலைகழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவர் காமராசு
சிறப்புரையாற்றினார். ஜே.சி.ஐ முன்னாள் மண்டல தலைவர் கோவிந்தராஜன் வாழ்த்துரை வழங்கினார்.
முடிவில் மன்னார்குடி நூலகர் ராஜா நன்றி கூறினார்.
நிகழ்வில் மன்னார்குடி வட்ட நூல்கள் ஜே.சி.ஐ உறுப்பினர்கள், வாசகர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
மன்னார்குடி கூத்தா நல்லூர் கிளை நூலகங்கள் மற்றும் ஜே.சி.ஐ மன்னை ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.