என் மலர்
உள்ளூர் செய்திகள்

செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியபோது எடுத்த படம்.
ஒற்றுமையுடன் பணியாற்றி தருமபுரியை தி.மு.க. கோட்டையாக மாற்ற வேண்டும் -அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேச்சு
- ஒன்றுமை இல்லாத காரணத்தால் சட்டமன்ற தேர்தலில் 5 சட்டமன்ற தொகுதியையும் இழந்தோம்.
- தருமபுரி மாவட்டத்தை தி.மு.க.வின் கோட்டையாக மாற்ற வேண்டும்.
தருமபுரி,
தருமபுரி மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் காரிமங்கலம் ஒன்றியம் பைசுஅள்ளியில் மாவட்ட அவை தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது.
மேற்கு மாவட்ட செயலாளர் முனைவர் பழனியப்பன் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சிறப்பழைப்பாளராக கலந்து கொண்டு வருகிற நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், வாக்கு சாவடி முகவர்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்தும் ஆலோனை வழங்கிளார்.
அப்போது பேசிய அவர், வாக்கு சாவடி முகவர்கள் புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணியில் முழுமையாக ஈடுபதிக்கொள்ள வேண்டும். அதே போல் ஒன்றிய பேரூர், நகர செயலாளர்கள், தொண்டர்களை மதிக்க வேண்டும் என்றும், அவ்வாறு இருந்தால் தான் நாம் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற முடியும். மாவட்டத்தில் நம்மிடையே ஒன்றுமை இல்லாத காரணத்தால் சட்டமன்ற தேர்தலில் 5 சட்டமன்ற தொகுதியையும் இழந்தோம்.
எனவே அதை மனதில் கொண்டு அனைவரும் ஒன்றுமையாக இருந்து நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் ஒன்றிணைந்து ஒன்றுமையாக பணியாற்றி தருமபுரி மாவட்டத்தை தி.மு.க.வின் கோட்டையாக மாற்ற வேண்டும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் செயல்களையும், நம்முடைய முதல்-அமைச்சரின் செயல்களையும் ஒப்பிட்டு பார்த்து அவரது உழைப்பை கண்டு அதே போல் தி.மு.க.வினர் உழைத்தால் நாடாளுமன்ற தேர்தலையும் இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் தி.மு.க.தான் வெற்றி பெரும் என்ற நோக்கத்தில் அனைவரும் பணியாற்ற வேண்டும். அதற்கு நான் உறுதுணையாக இருப்பேன் என்றார்.
இக்கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பி.சி.ஆர்.மனோகரன், சென்னகிருஸ்ணன், துணை செயலாளர்கள் வழக்கறிஞர் மணி, அன்பழகன், மாவட்டத் துணைச் செயலாளர் ரேணுகாதேவி, மற்றும் ஒன்றிய செயலாளர்கள் பல்வேறு அணிகளின் அமைப்பாளர், வாக்கு சாவடி முகவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.






